வெளிச்சந்தையில் அரிசி விலையை குறைக்கும் நோக்கிலேயே கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.30-க்கு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் வெளிச்சந்தையில் கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை அரிசி விலை உயர்ந்த சூழலில், இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்குத் தேவைக்கேற்ப அதிகபட்சமாக 5 கிலோ வரை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விலையை குறைக்கவே ரூ.30-க்கு அரிசி விற்பனை திட்டம்-வெங்கடரமணன்
