இந்திய விடுதலையின்போது முன்னாள் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்த தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட உம்மிடி எத்திராஜின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அந்த செங்கோலுக்கு உரிய கௌரவத்தை வழங்கி சிறப்பிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை நினைவுகூர்ந்துள்ள பிரதமர், அவரது கலைத்திறன் இந்திய பாரம்பரியத்தின் பெருமையை பிரதிபலிப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
உம்மிடி எத்திராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
