Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேலூர் பட்டாசு விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி

வேலூர் பட்டாசு விபத்தில் பலியானவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி

முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் நேற்று (21.10.2026) தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியிலிருந்த கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி (40 வயது) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் படுகாயமடைந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சங்கீதா (35 வயது) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!