Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை கண்ணப்பர் திடல் மழை நிவாரண மையத்தில் ஆணையர் சமீரன் ஆய்வு!

சென்னை கண்ணப்பர் திடல் மழை நிவாரண மையத்தில் ஆணையர் சமீரன் ஆய்வு!

வடகிழக்குப் பருவ மழையினை முன்னிட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிவாரண மையங்களை ஆய்வு செய்யும் விதமாக , சென்னை, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கண்ணப்பர் திடல் நிவாரண மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் ,பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 111 சமையல் அறைகள் தயார் செய்யப்பட்டு,

12,399 கிலோ அரிசி, 2355 ஒரு கிலோ டால், 1590 லிட்டர் எண்ணெய் மற்றும் 696 கிலோ உப்பு ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேமித்து வைத்திருப்பதாக தெரிவித்தார். சென்னை, ஆந்திராவுக்கு அருகாமையில் உள்ள ஒரு பெரு நகரம் என்று குறிப்பிட்ட அவர் 35

கிலோமீட்டர் வேக அளவில் காற்று வீசினால் அதனை எதிர்கொள்வதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மழை காரணமாக, பொதுமக்களுக்கு வைரல் ஃபீவர் உள்ளிட்ட நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அதனைத் தடுக்க 110 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். டெங்கு காய்ச்சலால்

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறினார். பருவ மழை மட்டுமல்லாமல் புயலையும் எதிர்கொள்வதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தாழ்வான பகுதி மற்றும் பதற்றமான பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு (relief center) மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். மழை நின்றவுடன் தண்ணீர்

தேங்கி நிற்கும் இடங்கள் மற்றும் உடைந்த டயர் போன்றவற்றிலிருந்து டெங்கு கொசு உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ளதாகவும், இதனை சீர் செய்ய 3000 திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் கோரிக்கை விடுத்தார். வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வுகள் நடைபெறும் நிலையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநகராட்சியுடன் இணைந்து, களப்பணியில் ஈடுபடுவதாகவும் தொலைபேசி வாயிலாக கோரிக்கைகளை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். தி நகர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 56000 உணவு பாக்கெட்டுகள் வழங்கியதாகவும் கூறினார்.

error: Content is protected !!