மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில், மேகமலைப் பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையினால் நீர்வரத்து கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கம்பம் மேற்கு வனச்சரக வனத்துறையினர் குளிக்கத் தடை விதித்தனர். இந்தத் தடை இன்று 4-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..4-வது நாளாக குளிக்கத் தடை
