அரியலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் அரியலூர் நகரில் மதியம் மூன்று மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. நின்று நிதானித்து பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அரியலூர் நகரின் மையப் பகுதியான மார்க்கெட் தெருவும், மங்காய் பிள்ளையார் கோவில் தெருவும், இணையும் தேரடி அருகே சாலையில் பெருக்கெடுத்து வந்த

மழை நீர் கழிவுநீர் வாய்க்காலில் செல்ல முடியாமல் சாலையில் குளம் போல் தேங்கி நின்றது. கால் மணி நேரமே பெய்த மழை என்றாலும் கனமழையால் பெய்ததால், இரண்டடி உயரத்திற்கு

தண்ணீர் தேங்கி நின்றதால், பிரதான சாலைகள் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும்

நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். சில இருசக்கர வாகனங்களில்

மழை நீர் உள்ளே புகுந்ததால், இன்ஜின் பழுதாகி நின்றதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதாபத்திற்குள்ளாகினர். இதுபோன்று தீபாவளி நெருங்கியதால், பொருட்களை வாங்க வந்த பொதுமக்களும், நடைபயணிகளும், மழை நீரோடு கழிவுநீரும் கலந்து நின்றதால் வீசிய துர்நாற்றத்தால், முகம் சுளித்தவாறு நடந்து சென்றனர். இச்சாலையின் இரு புறமும் கடை வைத்துள்ள வியாபாரிகள், கால் மணி நேரத்திற்கே இப்படி தண்ணீர் தேங்கி நின்றால், வரும் காலங்களில் அதிக மழை பெய்தால், தண்ணீர் கடைக்குள் உள்ளே புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அச்சமடைந்துள்ளனர். அரியலூர் நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலை துறையினரும் விரைந்து நடவடிக்கை எடுத்து, சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காமல் உடனடியாக பாதாள சாக்கடைக்குள் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
