தவெக அரசு சட்டமன்றத்தில் அறிவித்தது போல் வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பயணத்திட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், புறநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில செயலாளர் இளங்கோவன் கண்டன உரையாற்றினார்.போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
