அரியானா மாநிலத்தில் மின்வாரியத்தை மாநில அரசு பல சிறிய நிறுவனங்களாகப் பிரித்து, விநியோக உரிமத்தைத் தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, அம்மாநில மின்வாரிய ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியானா மின்வாரியத்தைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழ்நாடு மின்வாரியத் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி
தொழிற்சங்க நிர்வாகிகள்
பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
