எஸ் ஆர் எம் யு ரெயில் டிரைவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே பார்சல் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு எல் ஆர் எஸ் கோட்ட செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார்.
எஸ்ஆர்எம்யூ துணை பொதுச்செயலாளரும் மற்றும் திருச்சி பொன்மலை பொறுப்பாளர் வீரசேகரன் கண்டன உரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிரப்பப்படாமல் உள்ள 150 க்கும் மேற்பட்ட லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.டி எம் ஆர் இல்லாமல் சரக்கு ரயில்களை இயக்க அனுமதிக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் சரக்கு ரயில் ஓடும் தொழிலாளர்களை 9 மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரிய கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
