Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ரூ.3.18 கோடி வடிகால் தூர்வாரும் பணி- விரைந்து முடிக்க உத்தரவு!

திருச்சியில் ரூ.3.18 கோடி வடிகால் தூர்வாரும் பணி- விரைந்து முடிக்க உத்தரவு!

திருச்சி மாநகராட்சி சார்பில், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் ரூ.3.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநகரின் 5 மண்டலங்களிலும் உள்ள பிரதான வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள், மாநகராட்சி ஆணையர் பொன்மணி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
4 வது மண்டலத்துக்குட்பட்ட, 53 வது வார்டில் கலையரங்கம் பின்புறம் கல்யாண மண்டபம் முதல் வில்லியம்ஸ் சாலை வரை தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினர்.
திருச்சி மாநகரில் வடகிழக்கு பருவ மழையினால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாநகரம் முழுவதும் வெள்ள பாதிப்புகளை தடுக்க மற்றும் சீரான நீர் ஓட்டத்தை உறுதி செய்ய ரூ.3.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 215.74 கி.மீ நீளத்துக்கு நாட்டு வாய்க்கால், சம்பா வாய்க்கால், கோட்டை வாய்க்கால், மதுரா கார்டன் வாய்க்கால், எஸ்.எஸ்.நகர் வாய்க் கால், ராஜீவ்காந்தி நகர் வாய்க்கால், லயன் டேட்ஸ் வாய்க்கால், பூசாரித்தெரு வாய்க்கால், ரெட்டை வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால், கத்தரி வாய்க்கால், காத்தான் வாய்க்கால், செல்வா நகர் வாய்க்கால், விருப்பாட்சிபுரம் வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய வாய்க்கால்களும், நகரின் உட்பகுதிகளிலுள்ள பிற மழைநீர் வடிகால்களும் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது .
இதில் 136.80 கி.மீ. நீளம் மனித ஆற்றல்கள் மூலமும், 78.94 கி.மீ நீளம் இயந்திரங்கள் மூலமும் தூர்வாரப்படுகிறது.
இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க மாநகராட்சி பொறியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரத்திக் தயாள் உத்தரவிட்டார்.

error: Content is protected !!