வாக்குத் திருட்டு புகார்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகல் கோரிக்கை குறித்து விவாதிப்பதற்காக இன்று (அக்.22) நடைபெறவிருந்த இந்தியா கூட்டணி தலைவர்களின் காணொளி கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்திற்கான புதிய தேதி மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், எதிர்க்கட்சி தலைவர்களின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கூட்டணி தலைவர்கள் காணொளிக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
