சென்னை மாநகராட்சியில் வெறிநாய்க்கடி நோய் இல்லாத சென்னையை உருவாக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்கள் மூலம், 11.08.2026 செவ்வாய்க்கிழமை முதல் 21.10.2026 புதன்கிழமை வரை சுமார் 1,50,303 நாய்களுக்குத் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது வளசரவாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் பணி தீவிரமாக நடக்கிறது. இந்த இலக்கை அடைய பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாம்
