Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சியை
அடுத்த
திருவளர்ச்சி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60) இவர் கடந்த 21ந் தேதி திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில்
திருவளர்ச்சிபட்டி ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஆறுமுகத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஆறுமுகம் தலையில் பலத்த காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!