Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கார்த்திகா கைதைக் கண்டித்து கரூரில் நாதகவினர் ஆர்ப்பாட்டம்!

கார்த்திகா கைதைக் கண்டித்து கரூரில் நாதகவினர் ஆர்ப்பாட்டம்!

நடந்து முடிந்த தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கரூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட கார்த்திகா, மற்றும் நிர்வாகிகளை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூரில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் இடைத்தேர்தலின்போது, தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் ரோடு ஷோ மூலம் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், அக்கட்சியின் மாநில மகளிர்

அணியைச் சேர்ந்தவருமான கார்த்திகா, கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து முதல்வர் விஜய்யின் ரோடு ஷோ சென்ற பாதையில் மறியலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் ரோடு ஷோ சென்ற பாதையில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றியபோது, போலீசாரிடம் அவதூறாகப் பேசி தாக்க முயன்றதாகவும் கார்த்திகா மீது நான்கு வழக்குகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கார்த்திகாவைக் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு, மேற்கு மாவட்டச் செயலாளரும், மாநில வழக்கறிஞர் பாசறைச் செயலாளருமான நன்மாறன் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகா, அவரது கணவரும் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக. சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை. மதிவாணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, அரசியல் பழிவாங்கும் நோக்கில் சிறையில் அடைத்துள்ளதாகக் குற்றம்சாட்டினர்.

மேலும், தவெக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய நாம் தமிழர் கட்சியினர், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

error: Content is protected !!