கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டியூஷனுக்கு செல்வதற்காக பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்ற சஞ்சய் (12) என்ற சிறுவன் மாயமாகியுள்ளான். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சிறுவனை யாரேனும் கடத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற மாணவன் மாயம்
