Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கங்கைகொண்ட சோழபுரத்தில் அன்னாபிஷேக விழா: மகா அபிஷேகம் தொடக்கம்!

அரியலூர் -ஜெயங்கொண்டம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை நடைபெறும் அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு மகா அபிஷேகம் தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உலகப் பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். உலகப் புராதான சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று அண்ணாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி நாளை அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு இன்று பிரகதீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் தொடங்கியது. பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஆகம விதிப்படி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட உள்ளது. பக்தி கரகோஷங்களை எழுப்பி திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நாளை காலை 100 மூட்டை பச்சரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தை சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது மாலை 6 மணிக்கு மகா தீபாரதனை காட்டப்பட உள்ளது. விழாவில் அரியலூர், பெரம்பலூர், பாண்டிச்சேரி, தஞ்சாவூர், கடலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் காஞ்சி சங்கரமடம், கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழுமம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

error: Content is protected !!