சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் பகுதிகளில் குடிபோதையில் அதிவேகமாகக் காரை ஓட்டிச் சென்ற நபர், அடுத்தடுத்த இடங்களில் விபத்துகளை ஏற்படுத்தியுள்ளார். விபத்தை ஏற்படுத்திய பின் காரை நிறுத்தாமல் தப்பிக்க முயன்ற அந்த நபரை பொதுமக்கள் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை சரமாரியாகத் தாக்கிய பிறகு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபோதையில் அடுத்தடுத்து விபத்து.. இளைஞருக்கு தர்மஅடி
