திருச்சி மாவட்டம், மணப்பாறை வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே ஆம்னி பஸ் மோதி நிகழ்ந்த விபத்தில் நெல்லையைச் சேர்ந்த சிராஜ் உசேன் என்பவர் உயிரிழந்தார். மேலும் வேன் மற்றும் லாரி மீதான இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அருகே வேன் மீது பஸ் மோதி ஒருவர் பலி – 40 பேர் காயம்
