Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை நவ.16ல் திறப்பு!

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை நவ.16ல் திறப்பு!

சபரிமலை கோயில் மண்டல கால பூஜைகளுக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் நவம்பர் 17ம் தேதி தொடங்குகிறது.

இதை முன்னிட்டு 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது. மண்டல கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு www. sabarimalaonline.org என்ற இணையதளத்தில் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.

ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு மூலம் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

நிலக்கல், பம்பை வழியாக செல்வதற்கு 60 ஆயிரம் பேருக்கும், எருமேலி வனப்பதை மற்றும் வண்டிப்பெரியார் வழியாக செல்வதற்கு தலா 3 ஆயிரம் என 6 ஆயிரம் பேருக்கும் தினமும் ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கப்படும். நிலக்கல், எருமேலி மற்றும் வண்டிப்பெரியார் ஆகிய 3 இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும்.

error: Content is protected !!