திருச்சி விமான நிலையத்தில் 50 அரிய வகை பந்து மலைப்பாம்புகள், பச்சோந்திகள் பறிமுதல் – இருவரிடம் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து இலங்கை வழியாக கடத்தி வரப்பட்ட 50 அரிய வகை பந்து மலைப்பாம்புகள் (Ball Pythons) மற்றும் பச்சோந்திகள் (Iguanas) மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா

உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனைப் பயன்படுத்தி, பயணிகள் என்ற போர்வையில் வரும் சில சமூக விரோதிகள் தங்கம், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மெத்த பெட்டமைன் போன்ற போதைப்பொருட்களைத் தொடர்ந்து கடத்தி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
சமீபகாலமாக, நட்சத்திர ஆமைகள் உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகளை வெளிநாடுகளில் இருந்து கடத்தி இந்தியாவிற்குள் கொண்டு வருவதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில், தாய்லாந்திலிருந்து இலங்கை வழியாக திருச்சி வந்த விமான பயணிகளின் உடமைகளை DRI அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இரண்டு பயணிகளின் உடமைகளை சோதித்த போது, அதற்குள் சர்வதேச சந்தையில் அதிக மதிப்புள்ள மற்றும் தடை
செய்யப்பட்ட 50 எண்ணிக்கையிலான அரிய வகை பந்து மலைப்பாம்புகள் மற்றும் இகுவானா பச்சோந்திகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு
பிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து உயிரினங்களையும் மீட்ட அதிகாரிகள், அவற்றைக் கடத்தி வந்த இரண்டு பயணிகளிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கடத்திவரப்பட்ட இந்த உயிரினங்களை மீண்டும் தாய்லாந்துக்கே அனுப்பும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றன.
