Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓம் படத்தில் நித்யா ரெட்டியாக சாய் பல்லவி..!

ஓம் படத்தில் நித்யா ரெட்டியாக சாய் பல்லவி..!

அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இதையடுத்து, நடிகை சாய் பல்லவியின் கிளிம்ப்ஸ் வீடியோ எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில், சாய் பல்லவியின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

இத்திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நித்யா ரெட்டி என்கிற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டுள்ளனர். சாய் பல்லவி நடிப்பில் நவ. 5 ஆம் தேதி ராமாயணாவும் நவ. 20-ல் ஓம் திரைப்படமும் திரைக்கு வருகிறது.

error: Content is protected !!