தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையிலிருந்து தப்பிய கைதிகள் அருகில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியதாக தெரிகிறது.
புவியியல் காண்
இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக 17 சிறப்புப் படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் பலனாக தப்பியோடிய 17 கைதிகளில் இதுவரை 4 கைதிகள் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 13 கைதிகளைப் பிடிப்பதற்கான தேடுதல் தற்போதும் தீவிரமாகத் தொடர்கிறது.
கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இந்த அரசால், குற்றவாளிகளை கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை என்று சாடி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியதாகச் செய்திகள் வருகின்றன. இந்த அரசால், குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியவில்லை… சிறையில் உள்ள குற்றவாளிகளை பாதுகாக்கவும் முடியவில்லை! இதற்கு என்ன சால்ஜாப்பு சொல்லப்போகிறது தவெக-வின் POLICE IT WING?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
