கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலம் வரும் நவ.16-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான சாமி தரிசன முன்பதிவு வரும் அக்.29-ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்குகிறது என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து தங்களது தரிசனத்தை உறுதிசெய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை தரிசன ஆன்லைன் முன்பதிவு தேதி அறிவிப்பு!
