செஞ்சி பகுதியில் கடந்த 12ம் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி தொடர்பான வழக்கில், இன்னும் 3 நாட்களில் விசாரணையை முடிக்க முடியும் என சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 16வது நாளாக நீடிக்கும் இந்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் 6ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு ஜாதகம் எழுதிய ஆலம்பூண்டியைச் சேர்ந்த காத்தவராயனிடம் விசாரணை நடத்தினர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரைப் பிடித்தும் விசாரித்து வருகின்றனர்.
செஞ்சி சிறுமி வழக்கு – 3 நாட்களில் விசாரணை முடிக்க சிபிசிஐடி நம்பிக்கை!
