கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்.
கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டக் கிளை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 45 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும், TAPS ஓய்வூதியத் திட்டத்திற்கான விதிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
மேலும், 2002-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களின் 41 மாதப் பணி நீக்கக் காலத்தை நீதிமன்றத் தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என்றும், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஊர்ப்புற நூலகர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான உரிய பலன்களை வழங்க வேண்டும் என்றும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள் மற்றும் PPP, COE பயிற்சியாளர்களைக் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 45 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
