Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவண்ணாமலையில் மாயமான 3 பள்ளி சிறுமிகள் சென்னையில் மீட்பு!

திருவண்ணாமலையில் மாயமான 3 சிறுமிகள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மீட்கப்பட்டனர். திருவண்ணாமலை தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் 3 சிறுமிகளை பத்திரமாக மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் மற்றும் ஜோதி தம்பதியுடைய இரண்டு மகள்கள் மற்றும் அவர்களது உறவினர்களுடைய மகள் என 3 சிறுமிகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 26ம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமிகள் வீடு திரும்பாததால் சிறுமிகளின் பெற்றோர் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து சிறுமிகளை தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் சென்னை அருகே கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த 3 சிறுமிகள் செல்போன் சிக்னல் உதவியுடன் மீட்கப்பட்டனர்.

சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றுவிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தபோது சிறுமிகள் கண்டறியப்பட்டதாகத் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மீட்கப்பட்ட 3 சிறுமிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிறுமிகள் சென்னைக்குச் சென்றதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மயமான 3 சிறுமிகள் சென்னை கிளம்பாக்கத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!