திண்டுக்கல்லில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சமாதானபிரபு என்பவருக்கு, நேற்று (அக்., 28) மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. திண்டுக்கல் NIB-CID போலீசார் அறிவியல் ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். சிறப்பாக விசாரணை நடத்திய அதிகாரிகளை தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பாராட்டினார்.
திண்டுக்கல்லில் போதைப்பொருள் கடத்தல்- குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
