தருமபுரி அருகே கஞ்சா போதையில் இருந்த தேவராஜ் (19) என்ற இளைஞர், தனது பெற்ற தாயைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலைக் கைப்பற்றி தேவராஜைக் கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு போலீசாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் சிறை சென்ற இவர், சில தினங்களுக்கு முன்பே ஜாமீனில் வெளியே வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கஞ்சா போதையில் தாயை கொன்ற மகன் கைது
