கும்பகோணம் அருகே 3 வயது ஆண் குழந்தையின் உடல் முழுவதும் ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்குக் கடித்த யோகராஜ் என்பவரையும், உடந்தையாக இருந்த தாய் அட்சயாவையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அட்சயாவின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், யோகராஜுடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி வீட்டுக்கு வந்து இக்கொடூரத்தைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தையைக் கண்ட உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குழந்தையைக் கடித்துக் குதறிய கொடூரம்- தாய் உட்பட 2 பேர் கைது
