Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மினி செயற்கைக்கோள் ஏவி கோவை அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை!

விமானத்தைவிட 3 மடங்கு உயரம்… மினி சாட்டிலைட்டை விண்ணில் ஏவிய கோவை அரசுப் பள்ளி மாணவர்கள்!

விண்வெளி ஆராய்ச்சி… இனி பெரிய விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சாத்தியம்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் கோவை மாணவர்கள்!

கோவையைச் சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய மினி சாட்டிலைட் போன்ற வளிமண்டல ஆய்வுக் கருவி, ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

அக்டோபர் 30-ம் தேதி காலை 9 மணிக்கு, துடியலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலிருந்து ஏவப்பட்ட இந்தக் கருவி, சுமார் 3 மணி நேரம் பயணித்து, அதிகபட்சமாக 35 கிலோமீட்டர் உயரத்தை எட்டியது.

சாதாரண வணிக விமானங்கள் பறக்கும் உயரத்தைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான உயரம் இது!

அங்கே என்ன நடக்கிறது என்பதை ஆராயும் வகையில், வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம் ஆகியவற்றைக் கணக்கிடும் சென்சார்கள், காற்றில் உள்ள நுண்துகள்களைச் சேகரிக்கும் கருவி எனப் பல தொழில்நுட்ப வசதிகள் இதில் பொருத்தப்பட்டிருந்தன.

மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான கடும் குளிரையும் தாங்கி, சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் தரையிறங்கிய ஆய்வுக் கருவியைத் தேடல் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

குறிப்பாக, 55 அரசுப் பள்ளி மாணவர்களின் பங்களிப்பில் உருவான இந்த முயற்சி, அவர்களுக்குப் புத்தகத்தில் படிக்கும் அறிவியலை நேரடி ஆராய்ச்சியாக மாற்றியிருக்கிறது.

சின்ன வயதில் விண்ணைத் தொட்ட இந்த மாணவர்களின் கனவு, நாளை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய உயரங்களைத் தொடுமா?.

error: Content is protected !!