விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில், தந்தையால் கிணற்றில் வீசப்பட்ட 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த கணவர், தனது மகனை கிணற்றில் வீசியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சியில் அடுத்த பரபரப்பு.. 6 வயது மகனை கொன்ற தந்தை
