குஜராத் மாநிலம் மோர்பியைச் சேர்ந்த வழக்கறிஞர் புஷ்பா பட் என்பவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள கார் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிகர் ஜெயேஷ் கோகேல் என்பவர் காரைக் கொளுத்தியது அம்பலமானது. காரின் சென்சார் அலாரம் தொடர்ந்து அதிக சத்தத்துடன் ஒலித்துத் தொல்லை தந்ததால் எரிச்சலடைந்து காருக்குத் தீ வைத்ததாகக் கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கார் அலாரத்தால் ஆத்திரம்: காருக்குத் தீ வைத்த நபர் கைது
