திருச்சி, திருவானைக்காவல் சிவசக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் திவ்யா சேஷாத்திரி சம்பவத்தன்று இவரது வீட்டில் தனது மகளுடன் தூங்கிக் கொண்டு இருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த மடிக்கணினி மற்றும் செல்போன் இருசக்கர வாகனம் போன்றவை திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சிடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில் திவ்ய சேசாத்திரி வீட்டில் ஒரு பெண் வேலைக்காரியாக வேலை செய்து வருவதாக தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது தன்னுடைய மகன் தான் திருடினான் என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தபோது தஞ்சை மாவட்டம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முரளிதரன் (26) என்ற வாலிபர் திருடியது தெரிய வந்தது இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளிதரனை கைது செய்து உள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் வீட்டிற்குள் புகுந்து செல்போன், லேப்டாப் திருடிய வாலிபர் கைது
