கும்பகோணம் அருகே 30 சவரன் தங்க நகைகள் வெள்ளி மற்றும் பணம் திருடிய மருமகன் மாமியார் இருவரையும் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து திருவிடைமருதூர் காவல்துறையினர் அதிரடியாக கைகது செய்து பொருள்களை மீட்டுள்ளனர்.
கும்பகோணம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை கால் கிலோ வெள்ளி இரண்டரை லட்சம் ரூபாய் தொகை உள்பட வீட்டிலிருந்த சில்லறை காசுகளை கூட விட்டு வைக்காமல் கொள்ளையடித்து
சென்ற மாமியார் மருமகன் கைது
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை ராஜலட்சுமி நகரில் வசித்து வரும் கார்த்திக் இவரது மனைவி விஜயலட்சுமி கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபத்தில் ஆண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக புளியம்பேட்டை பகுதியில் சொந்தமாக வீடு வாங்கி வசித்து வருகிறார்
கடந்த 23 10 26 அன்று காலை கார்த்திக்கும் இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர் பின் மதியம் இரண்டு மணி அளவில் வீடு திரும்பிய கார்த்திக்கின் மனைவி கதவை திறக்க முயற்சி செய்து உள்ளார் அப்போது தெரு கதவு திறக்காததால் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து உள்ளார் அப்போது பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து கடைக்கு சென்று இருந்த கணவர் கார்த்திக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த கார்த்திக் உடைந்த கதவை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பெட்ரூமில் இருந்த இரும்பு பீரோ மற்றும் இரும்பு மேஜையின டிராவும் உடைக்கப்பட்டு அவைகளில் அவர் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை கால் கிலோ வெள்ளி பொருள்கள் உட்பட இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதாகவும்
கார்த்திக் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி அழகேசன் இரண்டு தனி படைகள் அமைத்து கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர் அப்போது அந்தப் பகுதியில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு ஆணும் பெண்ணும் செல்வது பதிவாகி இருந்தது அதன் அடிப்படையில் விசாரணையை முன்னெடுத்து பார்த்தபோது அந்த இருவரும்
பங்களாதேஷை சேர்ந்த ஹானா பேகம் 59 என்பவரும் அவரின் மருமகனான சென்னைசூளை மேட்டை சேர்ந்த குணசேகரன் 40 என்பதும் தெரிய வந்தது
பங்களாதேஷை சேர்ந்த ஹானா பேகத்தின் மகள் பேஸ்புக்கில் பழக்கம் ஆகி இருக்கிறார் குணசேகரன் அதில் இருவரும் பழகி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது
திருமணத்திற்குப் பிறகு குணசேகரனையும் அவரது மனைவியையும் பங்களாதேஷிற்கு அழைத்துச் செல்ல ஹானா பேகம் முயன்றுள்ளார் அவ்வாறு செல்வதற்கு பணம் தேவைப்பட்டதால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கலாம் என இருவரும் திட்டம் போட்டுள்ளனர் அதன் அடிப்படையில் கும்பகோணத்தை தேர்வு செய்து இருவரும் சென்னையிலிருந்து கும்பகோணம் வந்து பல பகுதிகளில் சுற்றி உள்ளனர் அவ்வாறு சுற்றியபோது கும்பகோணம் அருகே உள்ள புளியம்பட்டை பகுதியிலும் சுற்றி வந்த நிலையில் கார்த்திக் வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்டு உள்ளே நுழைந்து பின்புற கதவை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது
திருவிடைமருதூர் காவல்துறையினர் புளியம்பேட்டையில் உள்ள பல சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர் சுற்றி திரிவதை அறிந்து விசாரணை முன்னெடுக்கும் போது சென்னையை சேர்ந்த குணசேகரன் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பது காவல்துறை அறிந்து இருவரும் ஹரியானா தப்பி விடாமல் தமிழ்நாட்டிலேயே தட்டி தூக்கி உள்ளனர் இவர்களிடம் இருந்து கொள்ளை போன பொருட்களை மீட்டு உள்ளனர்
திருட்டு சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆவதற்குள் திருடர்களை பிடித்த திருவிடைமருதூர் காவல்துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்
தன் மகளை கல்யாணம் செய்த மருமகனுடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரின் செயல் இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
