சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி மோசடி வழக்கில் சாட்சியாக ஆஜராகுமாறு பாலிவுட் நடிகை நோரா பதேகிக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சிறையில் இருந்தபடி ஆள்மாறாட்டம் செய்து தொழில் அதிபரின் மனைவியிடம் பணம் பறித்த இந்த வழக்கில், சுகேஷின் மனைவி லீனா மூலமே தொடர்பு ஏற்பட்டதாக நோரா கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் குற்றம் சாட்டப்பட்டவராக அல்லாமல், சாட்சியாக வரும் நவம்பர் 2-ல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ரூ.200 கோடி மோசடி வழக்கு: நடிகை நோரா பதேகிக்குச் சம்மன்
