Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழக காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது என்றுதிருச்சியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகி விஜிலா சத்யானந்த் பேசினார்.

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடு உயர்வினை கண்டித்து திருச்சி மத்திய வடக்கு மாவட்டம் மற்றும் கிழக்கு தொகுதிதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு

நடைபெற்றது ஆர்பாட்டத்திற்கு மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் கவிதா, கிருபா, திவ்யா,கவிதா மாணிக்கம், ரம்யா பேகம், துணை மேயர் திவ்யா தனகோடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்கோட்டத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி ஏராளமான மகளிர் அணியினர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் தவெக அரசுக்கு எதிராக மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினர் முடிவில் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் வாசகி ராஜ்குமார் நன்றி கூறினார். பிறகு மாநில நிர்வாகி விஜிலா சத்யானந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது.கொலை, கொள்ளை நடைபெறுவது மட்டும் அல்லாமல் சிறையில் இருந்து கைதிகள் எல்லாம் தப்பி ஓடுகிறார்கள் இந்த விஷயத்தில் சிறை துறை டிஜஜி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!