Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஷமாகும் காற்று.. தடை மேல் தடை போடும் டில்லி

விஷமாகும் காற்று.. தடை மேல் தடை போடும் டில்லி

புதுடெல்லி, அக்டோபர் 31: டெல்லியில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்புப் பணிகளுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 5ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தூசியை ஏற்படுத்தக்கூடிய கட்டுமானப் பணிகள், கட்டிட இடிப்புப் பணிகள், சாலை மற்றும் மேம்பாலப் பணிகள், குழாய் பதிக்கும் பணிகள் உள்ளிட்டவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அத்தியாவசியப் பணிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் அதிகபட்சமாக 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே நேரில் பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றில் தூசித் துகள்கள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குளிர்காலத்தில் காற்றின் தரம் மேலும் மோசமடைவதைத் தடுக்கவும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் இந்தக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!