Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹேர் டை குடித்து தனியார் பள்ளி காவலாளி பலி-பரிதாபம்!

தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமாரியப்பன் (55). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மது குடித்துவிட்டு வந்தால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டது போல் புலம்பிக் கொண்டே இருப்பார் வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 09.00 மணியளவில் தங்கமாரியப்பன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது தலைக்கு ஹேர் டை அடிக்கப் போவதாகக் கூறியுள்ளார். அதற்கு அவரது மனைவி பொன்மாரி, “இரவு நேரத்தில் ஹேர் டை அடிக்க வேண்டாம், நாளை காலையில் அடிக்கலாம்” என்று தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கமாரியப்பன், மனைவியைப் வீட்டிற்குள் வைத்துப் பூட்டிவிட்டு, வீட்டின் வராண்டாவில் அமர்ந்து தலைக்கு அடிக்கும் ஹேர் டையை எடுத்து குடித்துள்ளார். உடனடியாக மயக்க நிலையிலிருந்த தங்கமாரியப்பனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மனைவியும் உறவினர்களும் கொண்டு சேர்த்தனர்.

அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த 30.10.26 அன்று காலை 10.30 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!