சிவகங்கை மானாமதுரை பகுதியில், ஒரு பெண்ணை மர்ம நபர்கள் கொடூரமாகத் தாக்கி, கழுத்தை நெரித்து வைகை ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண், உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மர்ம நபர்களின் அடையாளம் மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
பெண்ணை தாக்கி ஆற்றில் வீசியதால் பரபரப்பு
