தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தனியார்மயமாக்குவது குறித்தும் அரசு ஆராய்ந்து வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (நவ.2) செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் தனியார்மயமே ஆகாது என்று தாங்கள் கூறவில்லை என்றும், 2003-ல் ஜெயலலிதா தனியார் மதுக்கடைகளை மூடியதற்கான காரணத்தையும், இத்தகைய பெரிய முடிவை எடுப்பதற்கான சூழலையும் ஆராய வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
டாஸ்மாக் தனியார்மயமாகிறதா?.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
