Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெடிகுண்டு மிரட்டல்: குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டில் அமிதாப்!

வெடிகுண்டு மிரட்டல்: குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டில் அமிதாப்!

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்புக்கு பின்னால் நின்று தனது ரசிகர்களை நேரில் சந்தித்தார். பாலிவுட் மூத்த நடிகரான அமிதாப் பச்சன், மும்பையில் உள்ள தனது ‘ஜல்சா’ பங்களா வாசலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கூடும் ரசிகர்களை நேரில் சந்தித்து கையசைத்து வரவேற்பதை பல ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார்;

இந்நிலையில் மும்பை பாந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள பள்ளி ஒன்றுக்கு கடந்த 23ம் தேதி வந்த மர்ம இமெயிலில், ‘கலிஸ்தான் தேசிய ராணுவம்’ என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் அமிதாப் பச்சனின் வீடு மீது கடந்த 31ம் தேதி மற்றும் நவம்பர் 27ம் தேதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என்றும், பிரபல பாடகர் தில்ஜித் தோசாஞ்ச் சம்பந்தப்பட்ட இடத்திலும் தாக்குதல் நடக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து போலீசார் அங்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த நிலையில், தனது மகன் அபிஷேக் பச்சனுடன் வெளியே வந்த அமிதாப் பச்சன், உயர்மட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத பலத்த கண்ணாடி கூண்டின் பின்னால் நின்றவாறே ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவர் தனது வலைப்பதிவில், ‘இன்னும் கூடுதல் ஓய்வு தேவைப்படுகிறது. மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறேன். மனித உடலும் அதன் தனித்தன்மையும் வியப்பளிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது வினாடி வினா ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வரும் அமிதாப்புக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!