கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஓடைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு சென்ற ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக வெள்ள நீரில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநரும் ஆட்டோவோடு சேர்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார், வெள்ளத்தில் மாயமான ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கேரளாவில் கனமழை- வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர்
