அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடைகள் கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து முடித்துவைத்துள்ளது. உத்தரப் பிரதேச அரசு தாக்கல் செய்த நிலை அறிக்கையின்படி, வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்து ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இனி இந்த வழக்கில் தனது கண்காணிப்பை முடித்து கொள்வதாக அறிவித்துள்ளது.
அயோத்தி கோயில் நன்கொடை வழக்கு- மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
