Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய கப்பல் தாக்குதல்: மத்திய அரசு கண்டனம்!

இந்திய கப்பல் தாக்குதல்: மத்திய அரசு கண்டனம்!

ஓமன் கடற்பகுதி அருகே ‘MSV AL JUSUFI’ என்ற இந்திய வணிகக் கப்பல் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வணிகக் கப்பல்கள் மீது தொடரும் தாக்குதல் சம்பவங்கள் மிகவும் கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கண்டான் அறிக்கையில் ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளதாவது;

ஓமனின் Limah பகுதிக்கு அருகில், நேற்று மாலை வணிகக் கப்பலான MSV AL JUSUFI மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்திற்குரியது. கப்பலில் இருந்த 14 இந்தியர்களில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்; துரதிர்ஷ்டவசமாக, காயமடைந்த ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளார். இந்த உயிர் இழப்புக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓமனில் உள்ள நமது தூதரகம், நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருகிறது. மீட்கப்பட்ட இந்தியர்களை விரைவில் தாயகம் அழைத்து வரவும், உயிரிழந்தவரின் உடலைத் திருப்பி அனுப்பவும் ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. பதற்றத்தைத் தணிக்கவும், ராஜதந்திர ரீதியிலான தீர்வைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய வேண்டும். இதன் மூலம் வணிகக் கப்பல்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகளை இலக்கு வைக்கும் செயல்கள் முடிவுக்கு வர வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, இப்பகுதியில் உள்ள சர்வதேச நீர்வழிகள் வழியாக எவ்விதத் தடையுமின்றி கப்பல் போக்குவரத்தும் வணிகமும் மேற்கொள்ளப்படுவதை விரைவில் உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!