தமிழ்நாட்டில் வெடி வெடிக்காத கிராமங்களை பாராட்டும் விதமாக தீபாவளி முடிந்த பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சோலார் விளக்குகளும், மரங்களும் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆட்சியில் கொண்டு வந்த மீண்டும் மஞ்சப்பை திட்டம் தோல்வி திட்டம், பல இடங்களில் மீண்டும் மஞ்சப்பை இயந்திரங்கள் செயல்படவில்லை பழுதாகி உள்ளது. ஒரு திட்டத்தை மாற்றி புதிதாக அறிமுகப்படுத்தும்போது அந்த திட்டத்தின் பெயரை மாற்றுவதில் எந்த தவறும் இல்லை
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் பேட்டி
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ், கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜீவ்
சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்களிடமும் மாற்ற வேண்டும்.
சில கெமிக்கல் காம்பவுண்டுகளை வெடி தயாரிக்கும் போது தவிர்க்க வேண்டும், அப்போது விபத்துகளை தடுக்கலாம். வெடி பட்டாசுகளின் பெட்டிகளில் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அது பசுமை பட்டாசு என்பது தெரிய வரும்.
இப்போதே மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
அடுத்த தீபாவளியை மையப்படுத்தி இந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு வெடி தயாரிக்கும் நிறுவனங்களோடு பசுமை வெடி தயாரிப்பது மற்றும் மாசற்ற சூழல் உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம்.
தமிழ்நாட்டில் வெடி வெடிக்காத கிராமங்களை பாராட்டும் விதமாக தீபாவளி முடிந்த பிறகு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சோலார் விளக்குகளும், மரங்களும் வழங்கப்பட உள்ளது.
இப்போது பகலில் வெடிக்கும் சரவெடி போன்ற வெடிகள் குறைவாகிவிட்டது. இரவில் தான் அதிகமாக வெடி வெடிக்கிறார்கள்.
இரவு நேரத்தில்தான் அதிகமாக வெடி வெடிக்கிறார்கள். தீபாவளி அன்று இரவு 8,9 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றாள் நகரமே புகை மண்டலமாக உள்ளது.இந்த புகை குழந்தைகளை அதிகமாக பாதிக்கும், நுரையீரல் பிரச்சனை உள்ளவர்களை அதிகமாக பாதிக்க வாய்ப்பு கோவிட் தொற்றுக்குப் பிறகு பலருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகமாக உள்ளது.பள்ளிகளுக்கு அருகில் வெடி வெடிக்க கூடாது, வழிபாட்டு தளங்களுக்கு அருகில் வெடி வெடிக்க கூடாது, மிருகங்கள் அதிகம் வாழும் இடங்களில் வெடி வெடிக்க கூடாது. எழுதில் தீ பிடிக்கும் இடங்களில் வெடி வெடிக்க கூடாது. மாசற்ற தீபாவளியை அதிகமாக கொண்டாடுங்கள் என்பதுதான் எங்களது நோக்கம் என்றார்.
நான் செல்லும் இடத்திற்கு பட்டாசு வெடிப்பதையும், சால்வை கொடுப்பதையும் தவிர்க்க மாற்றமாக கூறியுள்ளேன். நான் செல்லும் விழாக்களுக்கு கூட பட்டாசு வெடிக்காதீர்கள் என வலியுறுத்தியுள்ளேன். மே மாதத்திற்கு முன்பு நானும் உங்களை போல ஒரு பொது மக்கள் தான், இப்போதுதான் பிரதிநிதியாக உள்ளேன். கடந்தாண்டை விட இந்த ஆண்டு பசுமை பட்டாசு விற்பனை அதிகமாகியுள்ளதை பார்க்கிறேன்.பசுமை பட்டாசு எவ்வளவு உற்பத்தி, விற்பனை அதிகமாக உள்ளது என்பதை தீபாவளி முடிந்த பிறகு அதை கணக்கு வைத்து கூறுவோம். கடந்த ஆட்சியில் கொண்டு வந்த மீண்டும் மஞ்சப்பை திட்டம் தோல்வி திட்டம். பல இடங்களில் மீண்டும் மஞ்சப்பை இயந்திரங்கள் செயல்படவில்லை பழுதாகி உள்ளது.ஒரு திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தும் போது அந்த திட்டத்தின் பெயரை மாற்றுவதில் எந்த தவறும் இல்லை.
திட்டத்தின் நோக்கத்தை மாற்றவில்லை புதிய முன்னெடுப்பை கொண்டு வந்துள்ளோம்.சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நான் மாறிய பிறகு எனது கார், வீடு, அலுவலகங்களில் நான் பிளாஸ்டிக் பயன்படுத்துவது இல்லை, முன்மாதிரியாக இருக்க வேண்டும் என எங்கும் நான் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை.
ஊட்டியில் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாடை தவிர்ப்பதை முழுமையாக பின்பற்றுகிறார்கள், கொடைக்கானல், ஏற்காடு பிற இடங்களில் முழுமையாக பின்பற்றபடவில்லை . தீபாவளி பிறகு அங்கெல்லாம் ஆய்வு செய்து முழுமையாக பிளாஸ்டிக் தடுக்க நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்படும்.
ஆற்று படுக்கைகள் அருகில் தான் சாயப்பட்டறைகள் அமைந்துள்ளது. ஐந்து மாத ஆட்சியில் 467 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரிய ஆளை,
சின்ன ஆளை என எந்த பாரபட்சமும் இன்றி தவறு செய்தால் அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம். நாளைய தலைமுறையினருக்கு காசு பணத்தை விட்டு விட்டு செல்வதை விட நல்ல சுற்றுச்சூழலை விட்டு விட்டுச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
