திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் புரோகிதச் சடங்குகள் நடத்தப்பட்டதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர் படங்களுடன் கட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் திருமணத்தில் இது போன்ற சடங்குகள் நடப்பது திமுகவுக்கு இழுக்கு என அவர் சாடியுள்ளார். கொள்கைக்கு எதிரான இந்த இரட்டை நிலை தொடராமல் திமுக தலைவர் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவில் இரட்டை நிலைப்பாடு கூடாது – கி.வீரமணி காட்டம்
