ரயில்களில் இரவு 10 முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்ப்பிணிகள், நோயாளிகள் எந்நேரமும் உறங்க விதிகளில் இடமளிக்கப்பட்டுள்ள நிலையில், ஊழியர்களை அணுகாமல் விதியை எதிர்த்து வழக்கு தொடர முடியாது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2017-ல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் தற்போது உத்தரவிட்டுள்ளனர்.
ரயில் பயணிகளின் தூங்கும் நேர விதிமுறை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு
