Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மனைவியை கொன்று எரித்த கணவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு..

கரூரில், மனைவியைக் கொலை செய்து உடலை எரித்த கணவருக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி, வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார், தனது மனைவி பழனியம்மாளுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, அவரைக் காரில் அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அரவக்குறிச்சி காவல்துறையினர், சிவக்குமாரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை, இன்று கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேல், மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக சிவக்குமாருக்கு மூன்று ஆயுள் தண்டனைகளுடன், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், மூன்று ஆயுள் தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தண்டனை பெற்ற சிவக்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!