Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் மதுபாட்டில்.. தமிழக அரசு அதிரடி..!!

டாஸ்மாக் மதுபாட்டில்.. தமிழக அரசு அதிரடி..!!

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக, டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கப்படும் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், காலி பாட்டில்களை திரும்பப் பெறுவதற்காக, ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்கள் நிறுவ, அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்கு அவர்களின் மொபைல் எண்இணைப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுமே தவிர, பணமாக வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்பப்பெற டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!