Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீலாங்கரையில் முதல்வர் இல்லம் அருகே பச்சிளம் பெண் குழந்தை வீச்சு!

நீலாங்கரையில் முதல்வர் இல்லம் அருகே பச்சிளம் பெண் குழந்தை வீச்சு!

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர், தெற்கு நான்காவது மெயின் ரோடு பகுதியில் (முதலமைச்சர் வீட்டுக்கு பின்புறம் சுமார் 300 மீட்டர் தொலைவில்) இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

வழக்கம் போல் அப்பகுதி மக்கள் காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, சாலையோரம் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த நீலாங்கரை போலீசார், குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக அரசு குழந்தைகள் நல குழுமத்திற்கும் (CWC) தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அந்த குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை யார் வீசிச் சென்றது என்பதை கண்டறிய, கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை நீலாங்கரை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள மருத்துவ மனைகளில் கர்ப்பிணி பெண்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பச்சிளம் குழந்தையை இப்படி சாலையில் வீசிச் சென்ற சம்பவம் நீலாங்கரை பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!